அந்தி மாலை பொழுது
Read Count : 158
Category : Poems
Sub Category : N/A
சிறுவர்கள் விளையாடும் நேரம் அது
காதல் செய்ய ஏற்ற தருணம் அது;
சூரியன் உறங்க சென்று விட்டான்
விண்மீீீீன்கள் பூக்கத் தொடங்கின;
கருங்கடலில்வெண் மதி அமர்ந்திருப்பது போல,
ஓர் கரும்பாறையின் மீது என்மதி அமர்ந்திருந்தாள்;
மலரைத் தேடி வண்டுகள் செல்வது போல,
நானும் என் மலரைதேடிச் சென்றேன்;
கடல் சீற்றத்தை போல்அவள் சினத்தைக் கொண்டிருந்தாள்,
அது அழிவதற்கானது அல்ல
என் நலனுக்கானது;
ஆழ்கடலில் முத்து இருப்பது போல,
அவளதுஆழ்மனதில் அன்பு புதைந்திருக்கும்;
வானத்தில் மின்னும் விண் மீீீீனைப்
போல், அவளது மூக்குத்தி மின்னியது;
அதிசயத்தை பார்த்தது போல நின்றான்,
கோவம் தணிந்தது.
இருவரும் முல்லைக்கொடி போல்
பிணைந்து கொண்டனர்.
மெல்லிய இதழில் முத்தமிட்டான்,
இருவரும் மயக்கத்தில் அமர்ந்திருந்தனர்,
கயளும் நீீீீரும் போல ஒன்றாக இருப்போம் என்றான் இருளாகி விட்டது இருவரும் குடி சென்றனர்.
-கவியரசன்
சொற்ப்பொருள்;
மதி-நிலவு
கயள்-மீன்
குடி-வீடு